நோன்பு நோற்பதன் நோக்கம்

வருடம்தோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். அந்த மாத இறுதி நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நோன்பு இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. சூரிய உதயத்திற்கு முன்பு சாப்பிட்டுக் கொள்ளலாம், அதற்குப் பிறகு தண்ணீர் கூட அருந்தக் கூடாது. குறிப்பாக எச்சில் கூட முழுங்காமல் நோன்பு இருக்க வேண்டும். இது ஒரு தியாகமாகும். மாலை 6 மணிக்கு பின்னர் நோன்பு திறக்கப்படும்.

நோன்பு திறக்கும் நேரத்தில் கூட இந்த நோன்பு வைப்பதற்கு காரணமான அல்லாஹ்விற்கு நன்றி கூறுகிறார்கள் . அவ.வாறு நோன்பு இருப்பதால் இறைவன் தாம் கேட்பதை நிறைவேற்றுவதாகவும், தனக்கு மட்டுமல்லாது எல்லா மக்களுக்கும் வேண்டி பிரார்த்தனை இந்த காலத்தில் இறைவனிடம் கேட்பதாக கூறப்படுகிறது. நோன்பு திறக்கும் நேரத்தில் அல்லாஹ்விடம் நாம் வேண்டும் பொழுது அவைகள் அப்படியே நிறைவேறும் என்பது நம்பிக்கை என இஸ்லாமியர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்