
ஆற்றில் மூழ்கி எட்டு வயது சிறுவனை காணவில்லை
ஹசலக்க, வெரகந்தோட்டையிலுள்ள மகாவலி ஆற்றில் மூழ்கி எட்டு வயது சிறுவன் காணாமல் போயுள்ளார்.
குறித்த சிறுவன் தனது மூத்த சகோதரருடன் ஆற்றில் குளிக்கச் சென்ற போதே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன வெரகந்தோட்டை பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவனை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹசலக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
