
வெல ஓய ஆற்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு
-பதுளை நிருபர்-
பதுளை மாவட்டம் கந்தகெடிய 3 ம் பிரிவு வெல ஓய ஆற்றில் 44 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனதாக கந்தகெடிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கந்தகெடிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
