கோயில் கிணறு இடிந்து விழுந்ததில் 36 பேர் பலி

கோயில் கிணறு இடிந்து விழுந்ததில் 36 பேர் பலி

இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பெலேஷ்வர் மகாதேவ் கோயிலில் நேற்று வியாழக்கிழமை ராம நவமி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப் பூஜையின் போது கோயில் வளாகத்திற்குள் படிக்கிணறு மீது போடப்பட்ட காண்கிரீட் பலகை கிணற்றுக்குள் விளுந்ததில் 36 பேர் பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த கோயில் வளாகத்திற்குள் படிக்கிணறு ஒன்று இருந்துள்ள நிலையில், அதன் மேல் காண்கிரீட் பலகை போட்டு மூடப்பட்டுள்ளது. ராம நவமி விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அந்த காண்கிரீட் பலகை மேல் நின்று கொண்டிருந்த போது, பலகை இடிந்துள்ளது இதில் 36 பேர் உயிரிழந்ள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அங்கு பொலிஸார் மற்றும் மாவட்ட ஆட்சி நிர்வாகம் விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்