கிளிநொச்சி பாடசாலையில் வன்முறை சம்பவம் : வெடித்தது போராட்டம்!

கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய விளையாட்டு போட்டியில் இனந்தெரியாதோரால் நடத்தாப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயம் முன்பாக இடம்பெற்றது.

கிராம மட்ட அமைப்புக்கள், பெற்றோர் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.