பறவை காய்ச்சலால் பீடிக்கப்பட்ட முதலாவது நபர்

பறவை காய்ச்சலால் பீடிக்கப்பட்ட முதலாவது நபர்

சிலி நாட்டில் பறவைக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட( வயது – 53 ) முதல் மனிதர், கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

நோயாளி ஆபத்தான நிலையில் இல்லை என்றும், தொற்றாளருடன் தொடர்பில் இருந்த ஏனையோர் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

சிலியில் கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து காட்டு விலங்குகளிடையே H5N1 எனப்படும் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டு வருகிறது.

எனினும் இந்த வைரஸ் பறவைகள் அல்லது கடல் பாலூட்டிகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடும். மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுவதில்லை என்றும் சிலி சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்