
கோடைக்கால முகப்பருவுக்கு தீர்வு
கோடைகால முகப்பருவுக்கு தீர்வு
கோடைக்காலம் வந்தாலே அதிகமானோர் சந்திக்கும் சரும பிரச்சனை முகப்பரு (பிம்பிள்). பருவ காலங்களிலேயே கோடையில் தான் ஒருவர் முகப்பரு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
இதற்கு காரணம் அதிகப்படியான வெப்பம், அதிகளவு வியர்வையால் எப்போதும் சருமம் எண்ணெய் பசையுடன் பிசுபிசுப்பாக இருப்பது, தூசி போன்றவை தான் முக்கிய காரணங்களாக உள்ளன.
கோடைக்காலத்தில் சருமம் பிசுபிசுப்பாக இருப்பதால், இந்த பிசுபிசுப்பை போக்க ஒரு நாளைக்கு 1 தொடக்கம் 2 முறை கிளின்சர் பயன்படுத்தி முகத்தைக் கழுவ வேண்டும்.
இப்படி செய்யும் போது, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, முகப்பருக்கள் வருவது தடுக்கப்படும்.
பருக்கள் வந்தால் அதை உடைப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை அப்படி உடைத்தால், அந்த முகப்பரு காயமாக மாறி, முகத்தில் அசிங்கமான மற்றும் கருமையான தழும்புகளை ஏற்படுத்துவதோடு, முகத்தில் பரவத் தொடங்கும்.
எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்பவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் இந்த உணவுகளில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அவை உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து பருக்கள் வரத்தூண்டும்.
நார்ச்சத்து உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே நார்ச்சத்து அதிகம் உள்ள செரில்கள், நார்ச்சத்துள்ள ப்ளூபெர்ரி, கிரேப்ஃபுரூட் போன்ற பழங்களை உண்பதன் மூலம், உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் சுத்தமாக இருக்கும்.
கோடையில் பருக்கள் அதிகம் வரக்கூடாதெனில் வைட்டமின் A அதிகம் நிறைந்த உணவுகளான கேரட், பப்பாளி, பசலைக்கீரை மற்றும் தக்காளி ஜூஸ் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
முகத்தில் பருக்கள் இருந்தால், ஃபவுண்டேஷன் பயன்படுத்துவதை ஒரு வாரத்திற்கு நிறுத்துங்கள்.
இது முகப்பருக்களை போக்குவதோடு, பருக்களில் ஏற்படும் அரிப்புக்களைத் தடுக்கும்.
முகப்பரு அதிகம் வருபவர்கள் முகத்தில் மேக்கப் அதிகம் போடுவதைத் தவிர்க்க வேண்டும். அது சருமத்தில் பருக்கள் அதிகமாக வரத் தூண்டும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
