பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதி

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் வைத்தியசாலையில்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்க்கு சுவாசத்தொகுதியில் தொற்று ஏற்பட்டு சுகவீனமுற்று வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

86 வயதான பரிசுத்த பாப்பரசருக்கு கடந்த சில தினங்களாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனினும் அவருக்கு கொவிட் தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசுத்த பாப்பரசரை சில நாட்களுக்கு வைத்தியசாலையில் வைத்திருந்து முறையான சிகிச்சைகள் வழங்க வேண்டியுள்ளதாக வத்திக்கான் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்