
மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற 95 வயதான மூதாட்டி
மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற 95 வயதான மூதாட்டி
போலந்து நாட்டில் நடைபெற்ற உலக மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 3 போட்டிகளில் பங்கேற்று 95 வயதான இந்திய மூதாட்டி ஒருவர் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
டோரூனில் நடைபெற்று வருகின்ற டோரன், உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அரியானா மாநிலம் கேடா கிராமத்தை சேர்ந்த 95 வயதான பகவானி தேவி என்கின்ற மூதாட்டி 60 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், வட்டு எறிதல் போன்றவற்றில் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
