நிலத்தகராறு காரணமாக தம்பதியினர் வெட்டிக்கொலை

அம்பலாந்தோட்டை பொலன ருஹுனு ரிதிகம 3ஆம் மைல் பகுதியில் வீடொன்றினுள் தம்பதியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபரின் மைத்துனர் சந்தேகத்தின் பேரில் அம்பலாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அம்பலாந்தோட்டை பெலிகலகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் வீட்டுக்குள் புகுந்து கோடாரி மற்றும் கத்தியால் குறித்த தம்பதியினரை தாக்கி இரட்டை கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவர்கள் 61 வயதுடைய கணவன் மற்றும் 56 வயதுடைய மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நீண்டகாலமாக இருந்து வந்த நிலத்தகராறு காரணமாக இந்த கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.