
சூரியன் பற்றி நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
சூரியனில் கரோனா ஓட்டை: நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
சூரியனின் அமைப்பு மற்றும் செயற்பாடு ஆகியவற்றை நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் ஆய்வு செய்து வருகின்றது.
இந்த ஆய்வின் மூலம் சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான பகுதி தென்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இது “கரோனா ஓட்டை” என விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகின்றது. இதனை சூரியனின் தென்துருவ பகுதியருகே கடந்த 23 ஆம் திகதி நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், மணிக்கு 2.9 லட்சம் கிலோ மீற்றர் வேகத்தில் புவிகாந்த புயல்கள் அல்லது சூரிய காற்று ஏற்பட கூடும் என்று அமெரிக்காவின் என்.ஓ.ஏ.ஏ. அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக நியுஸ்.கொம்.ஏயு (news. com.au) என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சூரியனில் இருந்து வரும் ஆற்றல் நிறைந்த துகள்களால், கைத்தொலைபேசிகள், பூமியின் காந்தபுலம், இணைய வலையமைப்பு மற்றும் செயற்கை கோள்கள் போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்பட கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த கரோனா ஓட்டை அளவில் 3 இலட்சம் கிலோ மீற்றர் முதல் 4 இலட்சம் கிலோ மீற்றர் வரை பரந்து விரிந்துள்ளது.
இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தபட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
