பாடசாலைக்கு சென்ற மனைவியை தாக்கிய கணவன்
தெவலேகம மா ஓயா வத்த பிரதேசத்தில் முதலாம் தரத்திற்கு தனது பிள்ளையை சேர்ப்பதற்காக பாடசாலைக்கு வந்த தாய் ஒருவர் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வைத்துஇ கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெவலேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தாயின் கணவர் சில காலமாக போதைப்பொருளுக்கு அடிமையாகி இருந்ததால், தொலைபேசியில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் கழுத்து மற்றும் கை பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக மேலும் பொலிஸார் தெரிவித்தனர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
