தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.
தம்பலகாமம் பொற்கேணி பகுதியில் மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான சித்தம்பலம் திருநாவுக்கரசு (வயது – 66) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட குறித்த நபர் ஒரு மாத காலமாக மன உளைச்சலில் இருந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் தேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்