
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி
பேலியகொட மெனிங் பொதுச் சந்தையில் மரக்கறிகளின் விலைகள் மிகவும் குறைந்துள்ளன.
முன்னைய விலைகளுடன் ஒப்பிடுகையில் இது மூன்று மடங்கு குறைவு என பேலியகொட மெனிங் பொது வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
மரக்கறிகளின் மொத்த விலைகள் கிலோ ஒன்று 100 ரூபாவாக குறைந்துள்ளதாகவும், நேற்று திங்கட்கிழமை ஒரு கிலோ பீன்ஸ் விலை 100 ரூபாவாக குறைந்துள்ளதாகவும், மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் தலைவர் எச்.எம்.உபசேன தெரிவித்தார்.
தக்காளி கிலோ ஒன்று 150 – 180 ரூபாவிற்கும், 450 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கரட் 70 – 100 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
