பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி

பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி

அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தின் நாஷ்வில்லில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று சிறுவர்கள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

9 வயதுடைய மூன்று மாணவர்களும், 61 வயதுடைய இருவரும், 60 வயதான ஒருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டை நடத்திய 28 வயதான நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர், பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்