நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தாமதம்

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தாமதம்

கிறைஸ்ட்சர்ச்சில் மழை பெய்துவருவதால் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹேக்லி ஓவல் மைதானத்தில் ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இப் போட்டியானது இரவு – பகல் போட்டியாக இடம்பெறவுள்ளது இது ஸ இலங்கை நேரப்படி காலை 6.30 உள்ளூர் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டது. எனினும்இ மழையினால் போட்டி தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனமழை பெய்து வருகின்ற நிலையில். மைதான விரிப்புகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.மைதானத்தில் சுற்றிலும் சில இடங்களில் மழைநீர்த் தேங்கியுள்ளது. இதனால் பாரிய தாமதம் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இறுதியாக கிடைத்த தகவல்களின்படி  மாலை 7.05க்கும் போட்டிகளை ஆரம்பிக்க முடியுமென அதிகாரிகள் அறிவித்துள்ளதாக நியூஸிலாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்