
54 போத்தல் கசிப்புடன் பெண் ஒருவர் கைது
54 போத்தல் கசிப்புடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி தர்மபுரம் போலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு புன்னைநீராவி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காவல் கடமையில் ஈடுபட்ட பொலிஸார் வீதிச்சோதனை மேற்கொண்டனர்.
இதன்போதுஇ பொதி செய்யப்பட்ட கசிப்பினை மோட்டார் சைக்கிளில் ஏற்றியவாறு வேறொரு பகுதிக்கு கொண்டு சென்ற பொழுது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 54 போத்தல் கசிப்பு மற்றும் கசிப்பினை கொண்டு செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன தருமபுர பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
