தொல்பொருள் திணைக்களத்தினரை வெளியேறுமாறு பணிப்புரை

-யாழ் நிருபர்-

நாவலர் மண்டப வளாகத்தில் இருந்து தொல்பொருள் திணைக்களத்தினரை வெளியேறுமாறு ஆளுநர் பணிப்புரை

யாழ். நல்லூர் நாவலர் மணிமண்டப வளாகத்தில் இருக்கும் தொல்பொருள் திணைக்களத்தினரை வெளியேறுமாறு வடமாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

யாழ். நல்லூர் நாவலர் மணி மண்டபம் அமைந்துள்ள காணி இந்து கலாச்சார திணைக்களத்திற்கு சொந்தமாக காணப்படுவதால் அவர்களிடம் கையளிப்பதற்குரிய நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், நாவலர் மண்டபத்தின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து மாநகர சபையை விலகுமாறு ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கிய நிலையில் தொல்பொருள் திணைக்களத்தினரையும் அங்கிருந்து வெளியேறுமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அங்கிருந்து வெளியேறும் தொல்பொருள் திணைக்களத்தினர் தமது பொருட்களை பிறிதொரு இடத்தை தேர்வு செய்து காட்சி படுத்துவதற்கு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.