
பால்மாவின் விலை குறைப்பு
பால்மாவின் விலை குறைப்பு
சந்தையில் பால்மாவின் விலை இன்று திங்கட்கிழமை முதல் குறைக்கப்படுவதால் பால் தேநீர் கோப்பை ஒன்றின் விலையும் குறைக்கப்படவுள்ளது.
சந்தையில் ஒருகிலோகிராம் பால்மாவின் விலை இன்று திங்கட்கிழமை முதல் 200 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 80 ரூபாவாலும் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் இன்று திங்கள் முதல் பால் தேநீர் கோப்பை ஒன்றை 90 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளது.
சந்தையில் பால்மா மற்றும் சீனி என்பவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போது 100 தொடக்கம் 130 ரூபாவுக்கு இடைப்பட்ட விலைகளில் பால் தேநீர் விற்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
