நாட்டின் சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சில பிரதேசங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சியை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்