
பால்தேநீரின் விலை குறையும்
பால்தேநீரின் விலை குறையும்
பால்தேநீர் கோப்பை ஒன்றின் விலையை நாளை திங்கட்கிழமை முதல் 10 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையே இதற்கான காரணம் என அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
நாளை திங்கட்கிழமை முதல் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய பால் தேநீர் கோப்பை ஒன்றின் விலை 90 ரூபாவாக குறைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 80 ரூபாவாலும் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
