
அரச சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் :அமைச்சர் நளின் வலியுறுத்தல்
அரச சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் :அமைச்சர் நளின் வலியுறுத்தல்
அரச சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என ஜா எல பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த போது வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் பொருளாதார நெருக்கடியை அடுத்து அரச சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாமல் உள்ளது.
எதிர்காலத்தில் அரச சேவையாளர்களின் சம்பளத்தை 20,000 ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டு மக்களின் வருவாயை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
