
19% மரக்கறிகளும் 21% பழங்களும் வீணடைகின்றன
முறையான போக்குவரத்து இல்லாததால், வருடாந்தம் 19% மரக்கறிகளும் 21% பழங்களும் அழிவடைவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இவ்வாறு வருடாந்தம் 21,955 மெட்ரிக் தொன் மரக்கறிகள் அழிவடைவதாகவும் நுகர்வுக்கு எடுத்துக்கொள்ள முடியாத பழங்களின் அளவு 90,151 மெட்ரிக் தொன் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, அறுவடைக்கு பின்னரான அழிவுகளும் அதிகமாகவே காணப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார். அத்துடன் அறுவடைக்கு பின்னரான சேதங்களினால் 40% பயிர்கள் இழக்கப்படுவதாக மேலும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நகர்ப்புறங்களிலும் அதிகளவு உணவு வீணாவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், 2021ம் ஆண்டில் வீணான உணவின் அளவு 10 மில்லியன் மக்களுக்கு போதுமானது என குறிப்பிட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
