வாகன இறக்குமதி சம்பந்தமான கோரிக்கை

இன்றைய நாட்களில் நாட்டில் டொலர் கையிருப்பு அதிகரித்துள்ள நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்தார்.

மேலும் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இதுவரை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

வாகன இறக்குமதிக்கான தடை இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் தளர்த்தப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் மூன்று வருடங்களாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாமையால் பாவனையாளர்களும் வாகன இறக்குமதியாளர்களும் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்