இலங்கையை வந்தடைந்தது சுற்றுலா பயணிகள் கப்பல்

900 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 463 பணியாளர்களுடன் Viking Neptune என்ற பயணிகள் கப்பல் இன்று சனிக்கிழமை (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்த குறித்த பயணிகள் கப்பல் நோர்வே இராஜ்ஜியத்திற்கு உரித்தானது.

கப்பலில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் நாளை மறுதினம் வரை நாட்டில் தங்கியிருப்பதோடு, இந்த காலப்பகுதியில் கொழும்பு, கண்டிஇ காலி, பெந்தோட்டை, பின்னவல ஆகிய இடங்களுக்கு செல்லவுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்