மூதூர் பிரதேசத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை மூதூர்க் கோட்டத்தில் அமைந்துள்ள சந்தோசபுரம் பாடசாலை, இளக்கந்தைப் பாடசாலை, பாட்டாளிபுரம் பாடசாலை, மலைமுந்தல் பாடசாலை, நல்லூர் பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கத்தினால் ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் எஸ். குகதாசன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

இந்த வழங்கலின் பொழுது சந்தோசபுரம் பாடசாலையில் கல்வி பயிலும் 99 மாணவருக்குப் பயிற்சி ஏடுகள் உள்ளிட்ட கற்கைக் கருவிகளும் புத்தகப் பைகளும் வழங்கப்பட்டதுடன் அனைத்து மாணவர்களுக்கும் நண்பகல் உணவும் பரிமாறப்பட்டது .

மேலும், சந்தோசபுரம் பாடசாலை, இளக்கந்தைப் பாடசாலை, பாட்டாளிபுரம் பாடசாலை, மலைமுந்தல் பாடசாலை, நல்லூர் பாடசாலை ஆகியவற்றில் கல்வி பயிலும் ஐந்தாம் வகுப்பு மாணவர் ஒவ்வொருவருக்கும் 1680 ரூபா விலையுள்ள ‘ஞானோதயம்’ என்ற புலமைப் பரிசில் வழிகாட்டி நூலும் வழங்கி வைக்கப்பட்டது.

இவ்வழங்கலுக்கான அனுசரணையைக் கனடாவில் வதியும் யுவனிதா நாதன், சங்கீதா இராமச்சந்திரன், இராமகிருஷ்ணன் செல்வராசா, இந்திரஜித் பஞ்சாட்சரம், கதிர்வாணன் பத்மசீலன் ஆகியோர் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

Support for school students

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்