கைகளை வெட்டிய சம்பவம்: சந்தேக நபர் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்

கைகளை வெட்டிய சம்பவம்: சந்தேக நபர் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்

ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி அவரது கையை துண்டாக்கி அதனை எடுத்துச் சென்றிருந்த சந்தேகநபர் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவ கொரலவெல்ல பிரதேசத்தில் கடந்த 21ஆம் திகதி ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் சந்தேக நபர் பழிவாங்கும் நோக்கில் குறித்த நபரின் கையை வெட்டியுள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் சட்டத்தரணி ஊடாக மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை சரணடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்