வெளிநாட்டுப் பெண் ஒருவரால் மாணவிகள் மீது தாக்குதல்

காலி-உரகஸ்மன்ஹந்திய பகுதியில் உள்ள வெளிநாட்டு உதவி பெறும் பாடசாலை ஒன்றின் தலைமையாசிரியை மற்றும் மேலாளர் என்று கூறிக்கொண்டு வெளிநாட்டுப் பெண் ஒருவர் மாணவிகளை தாக்கியதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான மூன்று மாணவிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

10, 12 மற்றும் 14 வயதுடைய மூன்று மாணவிகள் இவ்வாறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாடசாலையின் தண்ணீர் குழாயை உடைத்தமையே இந்த மூன்று மாணவிகள் தாக்குதலுக்குக் காரணம் எனவும் மாணவிகளின் பெற்றோர் தாக்குதல் தொடர்பில் உரகஸ்மன்ஹந்திய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.