
கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில்
கிளிநொச்சி பளை பகுதியில் கேரள கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட, பொலிஸ் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரியும், காண்ஸ்டபிள் ஒருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, அவர்கள் வசமிருந்து 2 கிலோ 250 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களை நேற்றைய தினம் வியாழக்கிழமை கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட அவர்கள், மஹர நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்களை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
