
தந்தையை கிரிக்கெட் மட்டையால் தாக்கிக் கொன்ற மகன் கைது
தந்தையை கிரிக்கெட் மட்டையால் தாக்கிக் கொன்ற மகன் கைது
மட்டக்களப்பு கல்லடி பகுதியில், மகனின் கிரிக்கெட் மட்டடையால் கடுமையாகத் தாக்கப்பட்ட தந்தை பலியாகியுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், 65 வயதுடைய க.கருணாகரன் என்ற ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 16ஆம் திகதி தன்னை கிரிக்கெட் மட்டையால் மகன் கடுமையாகத் தாக்கியதாக குறித்த தந்தை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
18ம் திகதி அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 21ம் திகதி குறித்த நபர் மரணமடைந்துவிட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் காத்தான்குடி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நீதவான் நீதிமன்ற நீதிபதி நேற்று புதன்கிழமை மாலை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தை பிரதேச பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டார்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
