இறக்குமதி முட்டைகளின் முதல் தொகுதி நாட்டுக்கு

இறக்குமதி முட்டைகளின் முதல் தொகுதி நாட்டுக்கு

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் முதல் தொகுதி இன்று வியாழக்கிழமை அதிகாலை இலங்கை வந்தடைந்ததாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து 20 இலட்சம் முட்டைகள் இறக்குமதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அதில் முதல் தொகுதியாக தற்போது 10 இலட்சம் முட்டைகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சினால் நடத்த திட்டமிடப்பட்டுள்ள தேவையான பரிசோதனைகளைத் தொடர்ந்து குறித்த முட்டைகள் இன்னும் 3 நாட்களில் வெளியிடப்படும் என வர்த்தகஇ வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார்.

முதல் தொகுதி வருகையை முன்னிட்டு, இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரியும் 50 ரூபாவிலிருந்து ஒரு ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வரி குறைப்பு, கடந்த பெப்ரவரி 21 முதல் 3 மாதங்களுக்கு அமுலாகும் என நிதியமைச்சு முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்