
வீட்டில் 1300 பொம்மைகளுடன் அருங்காட்சியகம்
வீட்டில் 1300 பொம்மைகளுடன் அருங்காட்சியகம்
இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம் பாங்குராவ் பகுதியை சேர்ந்தவர் மகாதேவ் முகர்ஜி. இவர் தனது வீட்டில் 1300 பொம்மைகளுடன் அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார்.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொம்மைகளை சேகரித்து தனது வீட்டில் இந்த தனித்துவமான அருங்காட்சியகத்தை மகாதேவ் முகர்ஜி உருவாக்கியுள்ளார்.
இந்த அருங்காட்சியகத்தில் விசித்திரமான தோற்றத்தில் கண் கவரும் பொம்மைகள் இடம்பெற்றுள்ளன. மகாதேவ் முகர்ஜியின் வீட்டிற்கு கலைமீது ஆர்வம் கொண்டவர்கள் வந்து பார்வையிடுகின்றனர்.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இந்த பொம்மைகள் தங்கள் நாடுகளின் கதையைச் சொல்வது போல் உள்ளதாக இங்கு வந்து பார்வையிட்டுச் செல்வோர் தெரிவிக்கின்றனர்.
அவரது இந்த விசித்திரமான அருங்காட்சியகத்தில் 1200 முதல் 1300 அரிய பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.
இங்கு எகிப்திய மம்மி பொம்மைகள் முதல் ஆப்பிரிக்காவின் தான்சானியாவின் பொம்மைகளின் தொகுப்பு வரை இந்த வீட்டில் இடம்பெற்றுள்ளது.
மகாதேவ் முகர்ஜி 17 ஆண்டுகளாக தனது சொந்த முயற்சியால் வங்காளத்தில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளின் நாட்டுப்புற கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் பொம்மைகளை சேகரித்து வருகிறார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
