
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானம்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானம்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று தேர்தல் ஆணைக்குழுவுக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சீட்டு கிடைக்கப்பெறாமை மற்றும் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பட்டுள்ள தடை என்பன குறித்து இன்றைய தினம் கலந்துரையாடவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில்இ அதற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
