
எல்லாவல நீர்வீழ்ச்சியில் மாயமான மூவரின் சடலங்கள் மீட்பு
எல்லாவல நீர்வீழ்ச்சியில் மாயமான மூவரின் சடலங்கள் மீட்பு
எல்லாவல நீர்வீழ்ச்சியில் மாயமான மூவரின் சடலங்கள் மீட்பு இதுவரை குறித்த நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்று 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
ஒருவரின் சடலம் நேற்று செவ்வாய்கிழமை மீட்கப்பட்ட நிலையில் மேலும் மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.
அவர்களை தேடும் பணிகளில் பொலிஸார் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.
இதையடுத்து இன்று மேலும் மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வனர்த்தத்தை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் ஊர்களில் வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டு அனுதாபம் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதில் இறந்தவர்களின் விவரம் –
1. மொஹமட் லாபீர் முகம்மது சூரி (வயது 21) கல்முனை.
2. அபூக்கர் ஹனாப் (வயது 21) கல்முனை
3. முகம்மது நபீஸ் (வயது 20) சாய்ந்தமருது.
4. அஹமட் லெப்பை மொஹமட் அப்சால் (வயது 21) சம்மாந்துறை
இதுவரை குறித்த நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்று 17 பேர் உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


