கட்டுத்துவக்கு வெடித்து ஒருவர் உயிரிழப்பு
-யாழ் நிருபர்-
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தங்கவேலு மோகனச்சந்திரன் ( வயது 34 ) என்ற நபரே உயிரிழந்தவராவார்.
வேட்டைக்காகச் சென்றபோதே மேற்படி கட்டுத்துவக்கு வெடித்ததில் அவர் படுகாயமடைந்தார்.
காயமடைந்த நபரை சாவகச்சேரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரி ழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்து.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற் கொண்டுவருகின்றனர்.