நபர் ஒருவரின் கைகளை வெட்டி எடுத்துச் சென்றவரை தேடும் பொலிஸார்

நபர் ஒருவரின் கைகளை வெட்டி எடுத்துச் சென்றவரை தேடும் பொலிஸார்

கொழும்பில் மொரட்டுவை கொரலவெல்ல பிரதேசத்தில் நபர் ஒருவரின் கைகளை வெட்டிவிட்டு, அந்தக் கைகளுடன் தப்பிச் சென்ற சந்தேகநபரை கைதுசெய்ய விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

40 வயதுடைய குறித்த நபர் நேற்று செவ்வாய்கிழமை இரவு தனது வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்த போது, சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் அவரது கைகளைத் துண்டித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட முரண்பாட்டின் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்iகாண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்