
தண்ணீர் நெருக்கடி குறித்து ஐ.நா எச்சரிக்கை
தண்ணீர் நெருக்கடி குறித்து ஐ.நா எச்சரிக்கை
உலகளாவிய தண்ணீர் நெருக்கடி அதிகரித்தல் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான உடனடி அச்சுறுத்தல் தொடர்பில் ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
காலநிலை மாற்றம் மற்றும் அளவுக்கதிகமான பயன்பாடு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தண்ணீரை விரயமாக்குவதில் உலகம் அபாயகரமான பாதையில் கண்மூடித்தனமாகச் சென்று கொண்டிருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெறவுள்ள முதலாவது ஐ.நா தண்ணீர் மாநாட்டுக்கு முன்னதாக இந்த அறிக்கை வௌியாகியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
