
கிழக்கு மாகாண மக்களுக்கு கிடைக்க இருக்கும் மகத்தான சேவை
தற்போதைய காலகட்டத்தில் மாரடைப்பினால் பாதிக்கப்படுகின்ற மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்படுகின்றது. கோவிட் தொற்றுக்குக்குப் பின்னர் இளம் வயதில் மாரடைப்பினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய சாயி சஞ்ஜுவனி வைத்தியசாலையினால் பொதுமக்களுக்கு இலவசமாக இருதய சிகிச்சை வழங்கப்பட உள்ளது.
இவ்வைத்தியசாலையில் இலவச இருதய சிகிச்சை இடம்பெற யாழ் போதனா வைத்தியசாலையின் இருதயப் பிரிவு வைத்திய குழாம் மிகப்பெரிய பங்களிப்பை இதற்காக செய்திருந்தது. இது சம்பதமாக ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

