
பழனி சிரானின் பிரதான உதவியாளர் கைது
பழனி சிரானின் பிரதான உதவியாளர் கைது
திட்டமிடப்பட்ட குற்றங்களை புரியும் குழுவின் தலைவர்களில் ஒருவரான குடு செல்வியின் மகனான பழனி சிரானின் பிரதான உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வத்தளை பகுதியில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அவர் கைதானார்.
சந்தேக நபரிடமிருந்து ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைதானவர் தொடர்பில் மனித கொலை மற்றும் கொலைக்கு உதவி புரிந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
