கடற்றொழிலில் எகிப்திய அனுபவங்கள் பயன்படுத்தப்படுமா?

-யாழ் நிருபர்-

கடற்றொழிலில் எகிப்திய அனுபவங்கள் பயன்படுத்தப்படுமா?

இலங்கையின் கடற்றொழில் சார்ந்த அபிவிருத்தியில் எகிப்தின் அனுபவங்களையும் ஒத்துழைப்புக்களையும் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இலங்கை மற்றும் மாலைதீவிற்கான எகிப்து தூதுவர் மாகட் மொஷ்லேவிற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்த அவர் விரைவில் வட மாகாணத்திற்கு தான் வருகைதர எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இதன்போது கடற்றொழிலாளர்களுக்கும் கடலுணவு உற்பத்தியாளர்களுக்கும்  உதவ தயாராக உள்ளதாக எகிப்து தூதுவர் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்து தூதுவரின் வடக்கிற்கான விஜயத்தினை எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை சார்ந்து மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களை விளக்கியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்