அதிக விலைக்கு முட்டை விற்பனை : 9 இலட்சம் அபராதம்

சந்தையில் கட்டுப்பாட்டு விலைக்கு கூடுதலாக முட்டை உள்ளிட்ட ஏனைய நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் குழுவுககு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொரலஸ்கமுவஇ பொகுந்தர பொருளாதார மத்திய நிலையம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள பல கடைகளின் வர்த்தகர்கள் குழு ஒன்றிற்கு கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் இவ்வாறு அபராதம் விதித்துள்ளது.

முட்டை கட்டுப்பாட்டு விலை 44 ரூபாவாக இருந்த போதிலும் 50 ரூபாவிற்கு விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு தலா 3 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்