எரிபொருள் விலை கணிசமான அளவு குறைக்கப்படும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர

எரிபொருள் விலை அடுத்த மாதம் கணிசமான அளவு குறைக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அத்துடன், டிசம்பர் மாதம் மின் கட்டணத்துக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மசகு எண்ணெய் விலை குறைந்து, ரூபாவின் மதிப்பும் வலுவடைந்து வருகிறது. எரிபொருள் விலையில் நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ஏற்கனவே எனக்கு பணிப்புரை விடுத்துள்ளார், என அமைச்சர் தெரிவித்தார்.