
நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞர்கள்
நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞர்கள்
மொனராகல வெல்லவாய எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 4 இளைஞர்கள் இன்று செவ்வாய்கிழமை காலை நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளனர்.
சாய்ந்தமருது, கல்முனை மற்றும் காத்தான்குடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
10 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவொன்று இங்கு நீராட சென்றதாகவும் அவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன இளைஞரை தேடும் நடவடிக்கையை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
