போதை பொருள் வர்த்தகர்: கைது

போதை பொருள் வர்த்தகர்: கைது

கொழும்பில் இரத்மலானை தர்மராம பகுதியில் போதை பொருள் வர்த்தகர் என சந்தேகத்தின் பேரில் மங்கள என அழைக்கப்படும் கெலும் மங்கள சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ பொலிஸாரால் நேற்றைய தினம் திங்கட்கிழமை குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 600 கிராம் எடையுடைய ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதை பொருள் வர்த்தகர் ஜுட் பிரியந்தவின் உதவியாளராக கெலும் மங்கள செயற்பட்டு வந்துள்ளார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்