சட்டக்கல்லூரி தொடர்பாக பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட யோசனை தோற்கடிப்பு
இலங்கை பாராளுமன்றத்தில் இன்றைய தினம் செவ்வாய்கிழமை இலங்கை சட்டக்கல்லூரி தொடர்பான யோசனை முன்வைக்கப்ட்டு அதற்கு அமைவாக தீர்மானம் எடுக்கப்ட்டது.
மேலும் இதில் சட்டக்கல்லூரியில் நடத்தப்படும் அனைத்து பாடநெறிகளும் பரீட்சைகளும் ஆங்கில மொழிமூலத்தில் நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவான வாக்கெடுப்பின் போது தோற்கடிக்கப்பட்டது.
ஆங்கிலத்தில் பரீட்சை நடாத்துவதால் தற்போது உள்ள மாணவர்கள் பாரிய பிரச்சனையை எதிர்கொள்வர் எனவும் அதனால் இவர்களின் தற்போதைய கல்வி நடவடிக்கை பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.. .
ஆங்கில மொழிமூலத்தில் பரீட்சைகளும் பாடநெறிகளும் நடத்தப்படவேண்டுமென்ற யோசனைக்கு ஆதரவாக 1 வாக்கும் எதிராக 113 வாக்குகளும் செலுத்தப்பட்டிருந்தமை குறப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
