மின்வெட்டு இல்லை என உறுதியளித்த போதிலும் மின்வெட்டு அமுல்

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் முடியும் வரை மின்வெட்டுகளை விதிக்க மாட்டோம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) மற்றும் இலங்கை மின்சார சபை (CEB) உறுதியளித்த போதிலும் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் (HRCSL) நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, பரீட்சை காலத்தில் மின்வெட்டுகளை விதிக்க மாட்டோம் என PUCSL,  CEB  மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

எவ்வாறாயினும், உறுதியளிக்கப்பட்ட போதிலும் இன்று வியாழக்கிழமை ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.