இலங்கையில் லிஸ்டீரியோசிஸ் தொற்று இல்லை

இலங்கையில் லிஸ்டீரியோசிஸ் தொற்று இல்லை

லிஸ்டீரியோசிஸ் தொற்று நோய் நாட்டில் இல்லை எனவும் அது குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி கொள்ள தேவையில்லை எனவும் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சிவனொளிபாத மலைக்கு செல்லும் வழியில், லிஸ்டீரியா  மொனோசைட்டஜன் பக்றீறியா தொற்றால் ஏற்படும் இந்த நோயால் பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிக்கை விடுத்து குறித்த விடயத்தை தெரிவித்துள்ளது.

சிவனொளிபாத மலைக்கு சென்ற மேலும் இருவர் உயிரிழந்தமையை அடுத்து இந்த நோய் தொடர்பில் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்பட்டுத்தியது.

எனினும் அவர்களது உயிரிழப்புக்கு லிஸ்டீரியா தொற்று நோய் காரணம் என இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

மரண பரிசோதனைகளின் போது பெறப்பட்ட மாதிரிகளில் தற்போது ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்