போலி முத்துக்களை விற்க முயன்றவர் கைது

போலி முத்துக்களை விற்க முயன்றவர் கைது

முல்லைத்தீவில் தங்க முலாம் பூசப்பட்ட போலி முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற   ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெலி ஓயா – ஜனகபுரதைச் சேர்ந்த 54 வயது சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

போலி தங்க முலாம் பூசப்பட்ட 1,400 முத்து மணிகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக முல்லைத்தீவு நகரப்பகுதிக்குக் கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த சந்தேக நபரை கைது செய்த முல்லைத்தீவு பொலிஸார் போலி முத்துக்களை மீட்டுள்ளதுடன் சந்தேக நபரையும் சான்று பொருட்களையும் இன்று திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்