
இலங்கை மீனவர்கள் அறுவர் இந்தியாவில் கைது
-யாழ் நிருபர்-
இலங்கை மீனவர்கள் அறுவர் படகு ஒன்றுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் இலங்கை எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் சென்றமையால் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இன்று திங்கட்கிழமை பி.ப 2 மணியளவில் தாருவைகுளம் பகுதிக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
