
யாழில் மதுபானம் அருந்த கொடுத்து 15 வயது சிறுமி கூட்டுவன்புணர்வு
யாழில் மதுபானத்தை பருக்கி 15 வயதான சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் அச்சுவேலி – தென்மூலை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் மதுபானம் பருக்கப்பட்டு குறித்த சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சேர்ப்பிக்குமாறு கூறி சிறுமியை தாயாருடன் பொலிஸார் அனுப்பியுள்ளனர். எனினும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிவரை சிறுமி யாழ் போதனா வைத்தியசாலையிலோ, அல்லது யாழ் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலோ அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்திற்கு இந்த சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்படுள்ளது.
சிறுமியை உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலையில் முற்படுத்த யாழ் அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
